Sunday, 10 May 2020

To my mother on Mother's Day





எங்கிருந்து வந்ததம்மா, உஙகளது பளிங்கு நிறம்? எப்படி அம்மா, அப்படி ஒரு குழந்தை உள்ளம்?

இறுதி வரை மாறாத உஙகளது முக அழகும் அக அழகும் மகிழ்வில் எம்மை ஆழ்த்திற்று. உங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எம்மை வளர்க்கும் உரமாயிற்று. உங்கள் மூளையின் பலமும் ஞாபக சக்தியும், கண்ணகி வசனத்தை பொழியும் வேகத்தில் புலனாயிற்று. வைரமுத்துவின் அம்மா போல, நீங்கள் செய்யும் காய், மீன், இறைச்சி குழம்பெல்லாம் கமகம என்று மணம் வீச நாவில் எச்சி ஊறிற்று.

உங்கள் குழந்தைகள் ஐந்து பேர்கள்; பேரக்குழந்தைகள் பத்து பேர்கள்.
பேரக்குழந்தைகளுக்கு ஊட்டுவதிலும், உறவாடி மகிழ்வதிலும், உங்களிடம் நாங்கள் தோற்றுப் போனோம், அம்மா. வானிலிருந்து எம்மை வாழ்த்துங்கள், மின்னும் அன்பு தாரகையாய்.

No comments:

Post a Comment