Saturday, 14 September 2024

நினைவு நாள்


 From Premalatha Dinakarlal for her motherly supporter Dr. Rita Savarimuthu, on her first anniversary:

இந்த நாள், எங்கள் அற்புதமான ஆசிரியை டாக்டர் ரீற்றா  சவரிமுத்து அவர்களின் நினைவு நாள். அவர் ஒரு  அன்னை போல,  எம் நலன் கருதி, பல வருடங்கள் எங்கள் புனித சிலுவைக் கல்லூரியில்  பணி புரிந்தார். அவர் ஒரு சாதாரண ஆசிரியை அல்ல, அவர் எங்கள் கல்லூரியின் ஒளியாய்,  மிக அன்பான நண்பராக இருந்தார்.

என் PUC காலத்திலிருந்தே அவர் என் தமிழ் ஆசிரியையாக இருந்தார். ஆரம்பத்திலிருந்தேதமிழ் மொழியையும் அதன் இலக்கியத்தையும்நன்றாக நேசிக்க வைக்கும் திறன் கொண்டவர். என் கல்லூரி வாழ்க்கையில் முதல் முதல் சந்தித்த ஆசிரியை அவர். இளங்கலை பயிலும் போது, "மண்ணியல் சிறு தேர்" என்ற நாடகத்தை பயிற்றுவித்ததோடு, நாடகங்களில் நடிக்கவும் மேடையில் பேசவும் ஊக்கம் அளித்த நல்லாசிரியர் அவர்.

மாணவி என்ற நிலை மாறி, அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த போது, அவரது ஒழுங்கு மற்றும் கூட்டாண்மை செய்யும் திறன் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. எங்கள் கல்வி நிறுவனத்தின் வெற்றிக்காக அவர் எப்போதும் கடுமையாக உழைத்தார்.

என்றும் நன்றியுடன் நான் நினைவுகூறுவது, அவர் எங்கள் மனவருத்தங்களை களைந்து நம்மை ஊக்குவிக்கும் நண்பராக இருந்தது தான். அவரது உணர்ச்சிகரமான பிரார்த்தனைகளும், அன்பும், சிரிப்பும் எங்கள் மனங்களுக்கு ஆறுதல் அளித்தன.
கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கையுடன், தெய்வ சேவையை ஆற்றியவர். அவரது அன்பான செயற்பாடுகள் பலரின் வாழ்க்கையை மெருகேற்றியதுடன், அவரது ஆழமான பிரார்த்தனையின் பலனை நானும்  அனுபவிக்க நேர்ந்தது.

இன்று, நாம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நம்முன்  வாழ்ந்த அன்னையை இழந்து,  துக்கத்தை அனுபவிக்கிறோம், ஆனால் அவர் எங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்த ஒளியையும், பகிர்ந்த அறிவையும், வழங்கிய அன்பையும் நினைவில் வைத்துள்ளோம். அவரது நினைவுடன், நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக, பிறருக்கு  உதவிசெய்து வாழ்வோம்.

அவரது ஆன்மா எந்நாளும் அமைதி அடையட்டும், அவரது நினைவுகள் எங்களுக்கு  வழிகாட்டட்டும்.




No comments:

Post a Comment