Thursday, 7 January 2021

அப்பா





எனக்கு உயிர் தந்த ஹீரோ தான் என் அப்பா
முத்தெனவே முத்தமிட்டு தோள்மீது எனைத்தூக்கி
பிஞ்சு விரல்பற்றி ஊரெல்லாம் சுற்றி வந்து
தோழனாய் கலைகள் தந்த உயர் ஆசான் என் அப்பா

என்னிடம் தோற்றால் பூரிப்பில் மிதந்திடுவார்
எனைக் குறை கூறிடிலோ ஊர் வாயை அடைத்திடுவார்.
கண்டிப்பில் கரிசனை, கட்டுப்பாட்டில் கம்பீரம்
தந்தையின் உறவோ நெகிழ வைக்கும் குயில் பாட்டு.

கல் எனவே நான் நினைக்க சிலை எனவே அவதரித்தார்
வாடிய போதெல்லாம் மழை எனவே நீர்வார்த்தார்.
தனக்கென்றால் கஞ்சன்: எனக்கென்றால் குபேரன்.
அப்பா இருந்தால் போதும்- என்றுமே நான் மஹாராஜா. 


( written in an hour  - on request  - as a wind-up for Arun's short film "அப்பா 200". This was in December 2020. Arun made use of only 6 out of the 12 lines,  and it was good enough. )

To watch the short film in Youtube:

https://youtu.be/6U17KdsimHk



1 comment: