Friday, 2 April 2021

From my Diary ... என் சித்திக்கு

 என்றென்றும் நன்றியுடன் 

                             




                

வெள்ளை புடவை,  கையில் பைபிள்
முகத்தில் சாந்தம், பக்தியின் உருவம்-
இது என் சித்தியின் கடைசி கால தோற்றம்.

என் குழந்தைமனதில் பசுமரத்தாணி போல்
பதிந்ததோ முழுமையானதொரு ஆளுமை...
கடமை கண்ணியம் கட்டுப்பாடென

பாட்டியுடன் சமையல், பின் கட்டுச் சோறு,
தலையணை அழுத்திய அழகிய புடவை,
அப்பா தந்த பைலட் பேனா, notes of lessons,

நிமிர்ந்த நன்னடை,  அறிவுத் திறனோடு
பள்ளியை நோக்கி அனுதின பயணம்.
நல்லாசிரியை, அமைதியான என் சித்தி.

குண்டலையில் செல்லப்பிள்ளை
யானை கண்டு மிரள, ஓடி வந்ததோ
சித்தியின் மடியில்.  அடித்தது யோகம்.

ஆசிரியையின் அபரீத திறமை வேகம்
சிலையென எனைச் செதுக்கிற்று.
மூன்றாம் வகுப்பில் நான்  -  ஆறே வயதில்.

தொடர்ந்த வெற்றி அனைத்துமே
என்றென்றும் சித்திக்கே சமர்ப்பணம்
சொல்லவொண்ணா நன்றியுடன்.


No comments:

Post a Comment